மகியங்கனை பற்றி எழுத வேண்டும் என்று தீர்மானித்த போது எழுதுவதற்காக மீண்டும் அந்தத் தேசம் நோக்கிப் போக வேண்டும் என்று தோன்றியது. பல்கலைக்கழகக் காலத்தில் பல தடவைகள் மகியங்கனையை ஊடறுத்து பல காரணங்களுக்காகப் பயணம் செய்திருக்கிறோம். அந்தக் காலப்பகுதியில் மகியங்கனை விகாரை, சொரபொவ வெவவிற்குக்கூடச் சென்றிருக்கின்றோம். கண்டியில் இருந்து மகியங்கனை பொது வண்டியில், நெருக்கமான சனநெரிசலுடன் பயணித்த காரணத்தினால் பெரிதாக எதையும் பார்க்கிற சூழல் இருந்ததில்லை. ஒரு காலையும், பொழுதும், மாலையும், இரவும், அங்குள்ள மனிதர்களும் அவர்களது கலாச்சாரமும்கூட எப்படிப்பட்டது என்பதுபற்றி எனக்கு தெரியாது. ஒரு மண்ணின் இயல்பான நாளை, அந்த மனிதர்களின் வாழ்வை அறியாத ஒருவர் எப்படி உணர்வுபூர்வமான ஏதோவொன்றை எழுத முடியும்? நிச்சயமாக முடியாது.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment