சின்னச்சின்னதாக, செய்யக்கூடிய அலகுகளாக நம் வேலையைப் பிரித்துக்கொள்ளுதல் முக்கியம். தினமும் வீடாகட்டும் அலுவலகமாகட்டும்… நீங்கள் கஷ்டப்பட்டு நிறைய வேலைகளைச் செய்கிறீர்கள். ஆனால் ஒரு சின்ன முன்னேற்றத்தைக்கூடக் காண முடியவில்லையே என்று நீங்கள் வருந்துவீர்களா? மருத்துவத்துறையில் தலைசிறந்த மருத்துவர் என நியூஜெர்சி வாழ் இந்தியர்களிடையே நல்ல புகழும் பெயரும் பெற்ற மருத்துவர் மீனா மூர்த்தி நல்ல உடல்நலப் பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது பற்றிக் கூறுகிறார். அவர் இன்னமும் மருத்துவராக, சமூக சேவகியாகப் பல நிலைகளில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
உடல் எடை 10 பவுண்டு அல்லது 6 கிலோ குறைக்க வேண்டும் என்ற குறிக்கோளோ அல்லது நாளொன்றுக்கு 5 மைல் நடக்க வேண்டும் என்றோ நீங்கள் அட்டவணையில் எழுதினால் அது மலைப்பைத் தரும். அந்த மலைப்பே அந்தச் செயலை ஒத்திப் போடச் செய்யும்.அதற்கு மாறாகத் தினமும் முடிந்த போதெல்லாம் 5 நிமிடம் நடப்பேன் என்று வரையறை செய்துகொண்டால், ஒரு நாளில் கிட்டத்தட்ட 50-60 நிமிடங்கள் வரை உங்களால் நடக்க முடியும். சிறிது சிறிதாக அதை 10 நிமிடம், 15 நிமிடம் என்று அதிகரித்துக்கொண்டே போகலாம். அப்படி நடந்தால், அதன் விளைவாகச் சிறுகச் சிறுக எடை குறைய ஆரம்பிக்கும்.
Add Comment