தலைகீழ் ஓப்பனர்
மால்வேர் என்றாலே விண்டோஸ்தானா? முந்தைய அத்தியாயங்களை வாசித்தவர்களுக்கு இந்த ஐயம் எழுவது இயல்பு.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு மால்வேர் குடும்ப அங்கத்தினர் அறிமுகமானார். அவருடைய சில்மிஷங்களுக்கு விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்திலிருந்த ஓட்டைகள்தான் காரணம் என்று அறிந்துகொண்டோம்.
அப்படியென்றால் மால்வேர் குடும்பத்தாரின் ஆட்சி எல்லை விண்டோஸ் வரை மட்டும் தானா? பிற ஆபரேட்டிங் சிஸ்டங்கள் கங்கையைப் போலப் புனிதமானவையா? அல்லது அவையும் கங்கையைப் போலவே பாழ்படுத்தப்பட்டவையா?











Add Comment