இரட்டைச் சாவி இம்சைகள்
ரான்சம்வேர்கள் குறித்து முன்பே பார்த்தோம். ஃபைல்களைப் பூட்டிப் பணம் பறிப்பது. எய்ட்ஸ் ட்ரோஜன் என்பது இதன் மூதாதை.
எய்ட்ஸ் ட்ரோஜன் வந்த காலத்தில் இணையப் பணப் பரிவர்த்தனைகள் வளரவில்லை. எனவே அஞ்சல்பெட்டி எண் கொடுத்து மிரட்டினர். கண்டுபிடிப்பதும் எளிதானது.
இதே குடும்பத்தின் அடுத்த தலைமுறை ஒன்று வளர்ந்து வந்தது. அவை ‘க்ரிப்ட்டோ லாக்கர்’ (Crypto Locker) என்று அறியப்பட்டன. இவையும் மிரட்டல்வாதிகள்தான். ஆனால் மிரட்டும் விதம் அல்ட்ரா மார்டன்.
பயனாளருக்கு ஓர் இமெயில் வரும். பார்ப்பதற்கு அக்மார்க் நல்லவன் போலவே தெரியும். கொரியர் சர்வீஸில் இருந்து வந்தது போலத் தோற்றமளிக்கும். சில சமயங்களில் வங்கிகளிலிருந்து வந்தது போலவும் நடிக்கும்.











Add Comment