ஜப்பானிய எதிர்காலம்
லைபீரியா. ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையில் உள்ளது. எழில் கொஞ்சும் தேசம். லைபீரியாவின் தேசியக் கொடியும், அமெரிக்காவின் தேசியக் கொடியும் கிட்டத்தட்ட ஒன்று போலவே தோற்றமளிக்கும். அதனால்தானோ என்னவோ மால்வேர் குடும்பத்தார் இத்தேசத்தைக் குறிவைத்துத் தாக்கினர்.
லைபீரியாவின் ஒட்டுமொத்த இணைய இணைப்பும் ஒரே நாளில் முடக்கப்பட்டது. எல்லாப் புகழும் மால்வேர் குடும்பத்தாரையே சாரும்.
மால்வேர் குடும்பத்தாரின் அதிரடி தாதாக்களில் ஒருவன் மிராய். இது ஒரு ஜப்பானிய மொழிச் சொல். இதன் பொருள் ‘எதிர்காலம்’. இதே பெயரில் அனிமே தொடர் கூட வந்துள்ளது. இதை ஏன் மால்வேரின் பெயராக வைத்தார்கள் என்று தெரியவில்லை.
மிராய் ஒரு கொடூர வில்லன். நல்லவர்களைக் குழப்பித் தீச்செயல் செய்யத் தூண்டுவதுதான் மிராய்யின் வேலை. இங்கே நல்லவர்கள் என்றால் சாதுவான டிஜிட்டல் கருவிகள்.











Add Comment