Home » உரி – 123
உரி • நாள்தோறும்

உரி – 123

123. பொருந்தாப் பாண்டம்

உட்கார் என்று சார்வாகன் சொன்னான். தத்தன் எதிரே அமர்ந்ததும், என்ன பார்த்தாய் என்று கேட்டான்.

நீங்கள் சொன்னபடி கோயிலுக்குச் சென்றேன் ஐயனே. தரிசனம் முடித்துத்தான் திரும்பினேன்,

என்று தத்தன் சொன்னான்.

சார்வாகன் அமைதியாகச் சிந்தித்தான். மிக நிச்சயமாகத் தான் செலுத்தப்பட்டே வேறிடத்துக்கு வந்திருக்கிறோம் என்பதை உணர்வதில் அவனுக்குச் சிக்கல் இல்லை. ஆனால் செலுத்தி வந்தவர்கள் எங்கே விட்டுச் சென்றிருக்கிறார்கள், எதற்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பது அவனுக்குப் புரியவில்லை. குடந்தையில் தடாகத்தின் படித்துறையில் தத்தனுடன் சல்லாபம் செய்யத் தொடங்கியது அவனுக்கு நினைவிருந்தது. அதன் பிறகு நிகழ்ந்த எதையும் அவனால் நினைவுகூர இயலவில்லை. விபரீதமாக ஏதேனும் நடந்து, அது தத்தனுக்குத் தெரிந்திருக்குமானால் சிக்கல் வரும் என்று நினைத்தான். அந்த விபரீதம் தத்தனுக்கே நடந்திருந்தால் மேலும் பெரிய சிக்கலாகியிருக்கும் என்றும் நினைத்தான். ஆனால் தத்தனின் முகத்தில் சிறிதளவும் பதற்றம் இல்லை என்பதைக் கண்டான். அதுவும் குழப்பமளித்தது.

சட்டென்று அவன் தனது சிரத்தைச் சிலுப்பிக்கொண்டான். சிறிதோ பெரிதோ, ஒளித்து வைப்பதில்தான் எத்தனை இடர்பாடுகள். ஆனால் அவன் எதையும் ஒளிக்க விரும்பவில்லை. நடந்த அனைத்தையும் தத்தனுக்குத் தெரிவித்துவிடவே அப்போதும் நினைத்தான். ஆனால் இந்தப் பணியில் தத்தனை எதற்காக இணைத்தாரென்று கருவூரார் காரணத்தைச் சொன்ன பிறகு அதனைச் செய்யலாம் என்று இருந்தான். அது தாமதமாகிவிட்டதன் விளைவு இதுவென எண்ணிக்கொண்டான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!