நான் சிவப்பு மனிதன்
தகவல் திருடாத ‘நல்ல’ மால்வேர் ஒன்றைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இவருக்கு முற்றிலும் மாறான மால்வேர் மகராசன் ஒருவரை இந்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்வோம்.
ரெட் லைன் இவருடைய பெயர். ‘நான் சிவப்பு மனிதன்’ என்று தன்னைப் பெருமையாக மால்வேர் உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டான் ரெட் லைன்.
ரெட் லைன், தகவல் திருடும் கலையில் கில்லாடி. இவருடைய தொழில் நேர்த்தி அதி அற்புதமானது. பல்வேறு தேசங்களைச் சேர்ந்த புலனாய்வு அமைப்புகள் ஒன்றுசேர்ந்து இவருக்கு எதிராகப் போராட வேண்டிய நிலைமை வந்தது.
இருந்தபோதும் இவருடைய ஆட்டங்கள் தொடர்ந்தன. சிலவகையான மால்வேர்களை நாம் முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம். ஆனால் சில, இன்னும் பொதுவெளியில் சுதந்தரமாகத் திரிகின்றன.











Add Comment