Home » மால்வேர் குடும்பத்தார் – 28
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 28

கபடவேடதாரிகள்

நெவ் ஷுல்மெனுக்கு அப்போது வயது இருபத்தேழு. நெவ் ஓர் அமெரிக்கர். புகைப்படக் கலைஞர்.

2007ஆம் ஆண்டு. நெவ் ஷுல்மெனுக்கு மைஸ்பேஸ் தளத்தில் அக்கவுண்ட் இருந்தது. அதில் அவருக்கு ஒரு செய்தி வருகிறது.

அபி (Abby) என்றொரு பெண் குழந்தையிடமிருந்து வந்திருந்த செய்தி அது. எட்டு வயதுக் குழந்தை. தனக்கு ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம் என்று குறிப்பிட்டிருந்தது அக்குழந்தை.

நெவ்வின் புகைப்படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றது அச்செய்தி. நீங்கள் எடுத்துள்ள புகைப்படங்களை எனக்கு அனுப்புங்கள். அதை நான் ஓவியமாக வரைய விரும்புகிறேன் என்று கேட்டிருந்தாள் அபி.

குழந்தையின் விருப்பத்தை நிராகரிக்க நெவ் விரும்பவில்லை. அபியின் நட்பு வட்டத்தில் இணைந்தார். ஃபோட்டோக்களையும் அனுப்பி வைத்தார்.

சில நாள்களில் புகைப்படங்கள் ஓவியங்களாக மாறியிருந்தன. மிக நேர்த்தியாக வரையப்பட்டிருந்தன. தன்னுடைய படங்களை இவ்வாறு பார்ப்பது நெவ்வுக்கு மிகவும் பிடித்திருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!