Home » உரி – 132
உரி • நாள்தோறும்

உரி – 132

132. மீச்சிறு தூலம்

கறந்த பாலினைப் போலிருந்தது தத்தனின் சிந்தை. கொதிப்பில்லை. குழப்பங்களில்லை. கொந்தளிப்பில்லை. தவிப்பில்லை. அமைதியின் முழுமை என்பதே அவனது சிந்தையிலிருந்துதான் ஊற்றெடுக்கிறதென்று எண்ணும் தரத்தில் அது இருந்தது. குடந்தைக் காரோணத்தை அடுத்திருந்த படித்துறையிலிருந்து சார்வாகன் புறப்பட்டது தொடங்கி, வேரகத்துக்கு வந்து சேர்ந்ததுவரை நடந்த எதுவுமே அவனது சிந்தையில் இல்லை. ஆனால், நீ கோயிலுக்குச் சென்றுவிட்டு வா என்று சார்வாகன் நடுவில் அளித்த ஓர் உத்தரவு அவனுக்கு நினைவிருந்தது. சார்வாகனின் குடிசையிலிருந்து எப்படியோ வேரகத்துக்கு வந்திருக்கிறோம் என்று அவன் எண்ணியிருந்தான். அது முருகப் பெருமானின் சித்தமென்றும், அழைத்து வந்ததும் அவனே என்றும் முடிவு செய்திருந்தான். அதைக்கூட என்னால் கருவூராரின் செயலென்று விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால் தன்னைத் தேடிச் சார்வாகனும் பின்னாலேயே வேரகம் வரை வந்திருக்கிறான் என்று நம்பி, அதன் பொருட்டுச் சிறிது நேரம் குற்ற உணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறான் என்பதை அறிந்தபோது உண்மையிலேயே திகைத்துவிட்டேன்.

ஐயனே, என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் கோயிலுக்குச் சென்று வரச் சொன்னதும் நான் காரோணத்துக்குச் செல்லத்தான் நினைத்தேன். என்னையறியாமல் வேரகத்துக்கு எப்படி வந்தேன் என்று விளங்கவேயில்லை. இது முருகன் சித்தமன்றி இன்னொன்றல்ல என்று எண்ணிக்கொள்கிறேன்,

என்று அவன் சார்வாகனிடம் சொல்லவும் செய்தான். சார்வாகன் இதற்குப் பதிலளிக்கவில்லை. அமைதியாகக் கருவூர்ச் சித்தரை நோக்கினான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!