Home » மால்வேர் குடும்பத்தார் – 32
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 32

வேலி

ஆண்ட்ராய்ட் மால்வேர்களின் ஆட்டத்தைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ஆண்ட்ராய்டில் மட்டும்தான் மால்வேர் தாக்குதல் நிகழுமா? ஆப்பிள் தோட்டத்தைப் பூச்சிகள் தாக்காதா?

ஐஃபோன்களில் மால்வேர் தாக்குதலே கிடையாதா? ஆப்பிள் என்றைக்குமே மால்வேர்களுக்கு எட்டாக் கனிதானா?

இப்படியாகப் பல்வேறு கேள்விகள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் சொல்லிட முடியாது.

ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் இருக்கிறது. ஒரு செயல் நிகழவும் நிகழாதிருக்கவும் இக்காரணிகளே ஆதாரம்.

வாருங்கள். ஆப்பிள் தோட்டத்தை மெல்ல வலம் வருவோம். பூச்சிகள் உள்ளனவா என்று நீங்களே உணர்ந்துகொள்ளலாம்.

ஆப்பிள் கருவிகள் அனைத்துக்கும் ஒரே ஆபரேட்டிங் சிஸ்டம் கிடையாது. ஐஃபோன்களில் இருக்கும் ஆ.சியும் மேக் புக்கில் இருக்கும் ஆ.சியும் வெவ்வேறு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!