நல்ல நாய் வாங்குவது எப்படி?
திறந்தே வைத்திருந்தாலும் திருடு போகாது. இவ்வாறு நிகழ்வதற்கு நயத்தகு நாகரிகம் அவசியம். டிஜிட்டல் காட்டில் நயமெல்லாம் கிடையாது. வல்லவன் வாழ்வான். இதுதான் ஆதார விதி.
எனவே, நம் பாதுகாப்பு நம் கடமை. மால்வேர்களிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆன்டிவைரஸ்கள் அவசியம். அவற்றின் பரிணாம வளர்ச்சியைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
ஒரு நல்ல ஆன்டிவைரஸை எவ்வாறு கண்டடைவது? அதற்கென எதுவும் கல்யாண குணங்கள் உள்ளனவா? இவற்றுக்கெல்லாம் விடைகளைத் தேடுவதுதான் இந்த அத்தியாயத்தின் நோக்கம்.
டிஜிட்டல் உலகில் ஒரு தொல்லை. எதற்கெடுத்தாலும் எண்ணற்ற ஆப்ஷன்கள். எதை எடுப்பது, எதை விடுப்பது என்னும் குழப்பத்திலேயே பயனர்களை வைத்திருப்பார்கள். இதுவும் ஒருவிதமான விற்பனை உத்திதான்.











Add Comment