143. நச்சுக் கிருமி
பவனர் அவனைப் பாமரன் என்றோ, ஞானி என்றோ எண்ணிக்கொண்டு வந்திருக்க வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் அவனிடத்தில் அவருக்கு முரட்டுத்தனமோ, முழு அமைதியோ தென்படவில்லை. அவன் அமைதியாகப் பேசினான். ஆரவாரமாகச் சிரித்தான். தொண்டையைச் செருமித் தூவென இருந்த இடத்திலிருந்தே துப்பினான். நீர் அருந்தும்போதுகூட மேலெல்லாம் கொட்டிக்கொண்டான். தனது தோற்றம் குறித்தோ, எதிரில் இருப்பவரின் தோற்றம் குறித்தோ அவனுக்கு எந்த எண்ணமும் இல்லை. திகைப்பு, வியப்பு, மதிப்பு அல்லது மதிப்பின்மை என எவ்வித உணர்ச்சியும் அவனது முகத்தில் அவருக்குத் தென்படவில்லை.
நீங்கள் அறிவுக்கு மட்டும் மதிப்பளிப்பவர் என்று கேள்வியுற்றேன்,
என்று பவனர் சொன்னபோது,
நிச்சயமாக இல்லை ஐயா. நான் மனிதர்களை மட்டும் மதிப்பவன்
என்று அவன் சொன்னான்.
ஏற்கிறேன். அறிவென்பது மனிதர்களின் தனிச் சிறப்பல்லவா?











Add Comment