Home » உரி – 142
உரி நாள்தோறும்

உரி – 142

142. வேழம் வந்தது

அவர் தனியாகத்தான் வந்திருந்தார். தன்னுடன் வந்திருந்த ஒரு காவலனையும் தனது மாணாக்கர்கள் எழுவரையும் வேப்பங்காட்டின் எல்லையிலேயே இருக்கச் சொல்லிவிட்டுத்தான் காட்டினுள் புகுந்தார்.

சார்வாகனே! ஓ, சார்வாகனே, நீ எங்கே இருக்கிறாய்?

என்று குரலெழுப்பிய வண்ணம் வந்தவர், அவனது குடிசை தென்பட்ட தொலைவுக்கு வந்து சேர்ந்ததும் சிறிது நின்றார். அவருக்கு மூச்சிறைத்தது. சார்வாகனின் குடிசை இருந்த இடத்தைச் சுற்றி வேலிப்படல் போடப்பட்டிருந்தது. அவ்விடத்தில் மேலும் சில குடிசைகள் இருந்தன. வாலிபர்கள் பலர் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக அலைந்து திரிந்துகொண்டிருந்ததை அவர் கண்டார்.

பிள்ளைகளே, இதுதான் சார்வாகனின் இருப்பிடமா? அவர் இங்கேதான் இருக்கிறாரா?

என்று கேட்டபடி அவர் வேலிப்படலை நெருங்கினார். அவரைக் கண்டதும் சட்டென்று விரைந்து வந்த சில வாலிபர்கள் வணங்கி விலகி நின்று,

ஐயனே, வர வேண்டும்,

என்று சொன்னார்கள்.

உமது குருநாதர் இருக்கிறாரா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!