Home » மால்வேர் குடும்பத்தார் – 40
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 40

அரண்

டிஜிட்டல் பாதுகாப்பு என்பது அடைய வேண்டிய ஓர் இலக்கு அல்ல. அது தொடர் பயணம். தாக்குதல் நடத்துபவர்களுக்கும் அவற்றை முறியடிப்பவர்களுக்கும் இடையே நடக்கும் போர். முடிவற்ற போர்.

நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நொடியில் உலகெங்கும் பல லட்சம் சைபர் தாக்குதல் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சில வெற்றி பெறுகின்றன. பல முறியடிக்கப்படுகின்றன.

மால்வேர்களை எப்படியெல்லாம் முடக்கலாம் என்று விதவிதமாக யோசித்துவருகின்றனர் வல்லுநர்கள். அவர்களுடைய வேகத்துக்கு இணையாக ஓடுகின்றனர் மால்வேர் குடும்பத்தார்.

தொடக்கத்தில் மால்வேர்கள் இத்தனை ஆபத்தாக இல்லை. சில ஆர்வக்கோளாறுகள் தொடங்கி வைத்தனர். அவர்கள் விளையாட்டாக ஏதோ செய்யப் போக, இன்று டிஜிட்டல் உலகைப் பீடித்திருக்கும் பிணியாக வளர்ந்து நிற்கின்றன மால்வேர்கள்.

ஆர்வக்கோளாறு யுகம் முடிந்தது. பின்னர் வணிக யுகம் தொடங்கியது. மால்வேர்கள் என்பது விளையாட்டுப் பிள்ளைகள் அல்ல என்பதைப் புரிந்துகொண்டனர். இவர்களை ஆடவிட்டுப் பணம் பார்க்கலாம் என்று கிளம்பியது ஒரு கூட்டம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!