Home » உரி – 145
உரி • நாள்தோறும்

உரி – 145

145. வெளியில் மிதந்தவை

முகில் விலகிப் பரிதி துலங்குவது போலவெனச் சார்வாகன் சொன்னதை எண்ணிப் பார்த்தேன். அவன் சொன்னது எனக்குமே பொருந்துமெனத் தோன்றியது. முதல் முதலில் அவனது சிந்தையைக் கருதி, அவனை அடைந்த காலத்தை எண்ணிப் பார்க்கும்தோறும் எனக்கு வியப்புத்தான் மேலிடுகிறது. அவனது சிந்தை ஒரு பாழ்வெளியாகக் கிடந்ததையே பெரும்பாலும் அக்காலத்தில் கண்டிருக்கிறேன். ஒரு மனிதச் சிந்தை எப்படி இப்படி இருக்க முடியுமென்று திகைத்துத் திகைத்துத் தணிந்திருக்கிறேன்.

மல்லனை மல்லனென்று அறியாத நாள்களில் அவன் சார்வாகனுக்குள் நுழைந்து அவனைச் செலுத்திக்கொண்டு சென்றதன் சாட்சியாக நின்றபோதும் சரி, முதல் முதலில் குன்றாண்டார் கோயிலை அடுத்த சிறுமலைச் சிகரத்தின் உச்சியில் அவன் மயூரமுகியுடன் நர்த்தனமாடியதைக் கண்டபோதும் சரி, கற்பேழைகளுக்குள் இருந்து தோன்றிய மாணாக்கர்களுக்குச் சார்வாகனின் உடலுக்குள் இருந்தவண்ணம் மல்லன் கட்டளைகள் அளித்து அனுப்பியபோதும் சரி. சார்வாகனுக்குள் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்த தீவிரத்தை நானறிவேன். அந்தத் தீ, அவனது சிந்தையின் இயல்பல்ல என்பதும் அது அவனைச் செலுத்திக்கொண்டிருந்தவர்கள் கொண்டு வருவதென்பதும், அவர்கள் நீங்கும்போது அவனது சிந்தை ஒன்றுமற்றதாகிவிடுகிறதென்பதும் விளங்கவே எனக்கு நெடுங்காலம் எடுத்தது.

ஒரு வகையில் அவன் தனது சிந்தையை வெறும் வெளியாக வைத்திருந்தது சரியே என்று இப்போது தோன்றியது. இல்லாதபட்சத்தில் அத்தனை பெரிய வனத் தீ நிகர்த்த வீரியத்தை ஒரு சாதாரண மனிதன் தாங்க இயலாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!