ஆயிரம் பொருத்தங்கள் இருந்தாலும் அரசாங்கம் லைசன்ஸ் கொடுக்காவிட்டால் அமீரகத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாது. திருமண லைசன்ஸும் திருமணச் சான்றிதழும் ஒன்றல்ல. திருமண லைசன்ஸ் கிடைத்தால் மட்டுமே ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம்.
இருவர் காதலிக்கிறார்கள் அல்லது இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள் என்றால், மற்ற எதையும் யோசிப்பதற்கு முன் லைசன்ஸ் வாங்கும் வழியைப் பார்க்க வேண்டும்.
முதலில் படிவங்கள் நிரப்பும் பணி. இருவருடைய பாஸ்போர்ட் முதல்கொண்டு அடையாள அட்டை , குடும்ப அட்டை அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இருவரும் இஸ்லாமியர்கள் என்றால் ஒரு வழி. ஒருவர் மட்டும் இஸ்லாமியர் என்றால் மற்றவர் பேருக்காவது இஸ்லாமியராக மதம் மாற வேண்டும். இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே என்று கேட்பவர்களுக்கு இப்போது சொல்லப் போவது நிச்சயம் புதிதாக இருக்கும்.














நஸீமா அவர்களின் சானலில் வந்த பால்கனியில் பல புதுமையான செய்திகளைப் படித்தாலும் மெட்ராஸ் பேப்பரில் கல்யாணத்துக்கு கட்டாய லைசென்ஸ் மே லும் ஒரு புது செய்தி. அமீரகத்தின் ஆச்சர்யங்களில் ஒன்று. காலத்திற்கேற்ப அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. மருத்துவ பரிசோதனை.
பாபநாசம் நடராஜன்