37. ஃபீனிக்ஸ் பிள்ளைகள்
அன்புள்ள காந்தி,
இந்தியாவில் உங்களுடைய ஃபீனிக்ஸ் பிள்ளைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக நீங்கள் என்னுடைய பள்ளியைத் தேர்ந்தெடுத்தீர்கள். அது எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது, அந்தப் பிள்ளைகளை இங்கு சாந்திநிகேதனத்தில் பார்க்கும்போது, அந்த மகிழ்ச்சி இன்னும் பலமடங்காகிவிட்டது.
உங்கள் பிள்ளைகளைப் பார்த்து எங்கள் பிள்ளைகள் நிறையக் கற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். பதிலுக்குச் சாந்திநிகேதனமும் உங்கள் பிள்ளைகளுக்கு நிறையக் கற்றுத்தரும் என்றும் நம்புகிறோம்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளை என் பிள்ளைகளாகவும் கருதி அவர்களை இங்கு அனுப்பிவைத்ததற்கு நன்றி. பொருள் பொதிந்த முயற்சிகள் மிக்க நம் இருவருடைய வாழ்க்கைகளும் இதன்மூலம் ஒன்றிக் கலந்துவிட்டன.
உங்கள் உண்மையுள்ள,
ரவீந்திரநாத் தாகூர்.
காந்தி தன்னுடைய ‘ஃபீனிக்ஸ் பிள்ளை’களைப் பார்ப்பதற்கு வங்காளத்துக்குக் கிளம்புவதற்கு முன்பாகத் தாகூர் அவருக்கு எழுதிய கடிதம் இது. அடுத்த பல ஆண்டுகள் அவர்களுக்கிடையில் நீண்ட, ஆழமான நட்பு மலர்ந்தது. பல முரண்கள், கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்கள், மிகவும் மதித்தார்கள்.
Add Comment