Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 42
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 42

42. தூணான தோழர்

காந்தி எளிமையாக வாழ்ந்தவர்தான். ஆனால், அவரால்கூடப் பணமின்றி வாழ்ந்திருக்க இயலாது.

அவர் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்கான செலவுகளை எவ்வளவுதான் குறைத்துக்கொண்டாலும், பலரை ஒன்று திரட்டி ஆசிரமம் நடத்துவதற்குத் தொடர்ந்த பணத்தேவை இருந்தது. ஆசிரமத்திற்கான இடத்தை வாங்கவேண்டும், அல்லது, அதற்கு வாடகை கொடுக்கவேண்டும். அங்கு எளிய குடியிருப்புகளை அமைக்கத் தேவையான பொருட்களை வாங்கவேண்டும். அங்குள்ளவர்கள் சொந்தமாகச் சமைத்துக்கொள்வது என்றாலும், அதற்குத் தேவையான பாத்திரங்கள், மளிகைப் பொருட்களை வாங்கவேண்டும். அவர்கள் தாங்களே விவசாயம் செய்து பிழைப்பது என்றாலும், தொடக்கத்தில் அதற்குச் சில கருவிகள் தேவைப்படும். அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களை வெளியிலிருந்து வரவழைத்தால் அவர்களுக்குக் குறைந்தபட்சச் சம்பளமாவது கொடுக்கவேண்டியிருக்கும்… இதற்கெல்லாம் பணக்காரர்களுடைய உதவி அவருக்குத் தேவைப்பட்டது.

முன்பு தென்னாப்பிரிக்காவில் இதுபோன்ற பரிசோதனைக் குடியிருப்புகளை நடத்தி அனுபவம் பெற்றிருந்த காந்தி இப்போது இந்தியாவில் தான் தொடங்கவிருக்கும் ஆசிரமம் எப்படி இருக்கும், அதற்கு என்னமாதிரியான தொடக்க உதவிகள் தேவைப்படும், அவற்றுக்கு யார் உதவக்கூடும், அந்த உதவிகளைப் பயன்படுத்திக்கொண்டு ஆசிரமத்தைத் தற்சார்பு நிலைக்கு, அதாவது, தனக்குத் தேவையானவற்றைத் தானே உருவாக்கிக்கொள்ளும் அளவுக்கு உயர்த்துவது எப்படி, அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகக்கூடும் என்றெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்தார். இதில் அவருக்கு ஓரளவு தெளிவு கிடைத்தபிறகுதான் சாந்திநிகேதனத்தில் இருக்கும் ஃபீனிக்ஸ் குழுவினரை இந்தியாவில் ஒரு நிரந்தரக் குடியிருப்பில் அமர்த்த இயலும்.

இந்த முயற்சியில் காந்திக்கு உதவுவதாகக் கோகலே வாக்களித்திருந்தார். ஆனால், இப்போது கோகலே இல்லாத சூழ்நிலையில் காந்தி வேறு கொடையாளர்களைத் தேடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!