Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 73
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 73

73. மூன்றடுக்கு

இந்தியாவுக்கு ஆசிரமங்கள் புதிதில்லை. ஆனால், முனிவர் அல்லாத ஒருவர், சமூக சேவையுடன் அரசியலிலும் ஆர்வம் கொண்ட ஒருவர் அமைக்கிற ஆசிரமம் புதிது.

என்னதான் அகமதாபாத் பணக்காரர்கள் காந்தியின் ஆசிரமத்துக்கு ஆதரவளிக்க முன்வந்தபோதும், அவருடைய இலக்குகள், வழிமுறைகள் அவர்களுக்கு எந்த அளவுக்குப் புரிந்தன என்பது கேள்விக்குறிதான். அவர்களுடைய நிதி உதவியைப் பெற்றுக்கொள்கிற தான் அவர்களுக்கு இதைத் தெளிவுபடுத்தவேண்டும் என்று காந்தி நினைத்தார்.

அத்துடன், இந்தியாமுழுவதிலுமிருந்து பலரும் காந்தியின் ஆசிரமத்தில் இணைய விரும்பினார்கள். அவர்களுக்கெல்லாம் இங்கு என்ன நடக்கும், என்ன நடக்காது, எதை எதிர்பார்க்கலாம், எதை எதிர்பார்க்கக்கூடாது என்று முன்கூட்டியே விளக்கிவிடவேண்டும் என்று காந்தி கருதினார். இதன்மூலம் சரியான நபர்கள் அவரை அணுகுவார்கள், இருதரப்பிலும் ஏமாற்றங்கள் குறையும்.

மூன்றாவதாக, தன்னுடைய ஆசிரமத்தைப்பற்றிய தெளிவு காந்திக்கு இருந்தபோதும், எதையும் பரிசோதனையாகவே எண்ணித் தொடங்குகிற அவருடைய அணுகுமுறை அவருக்குத் திறந்த மனத்தைக் கொடுத்திருந்தது. தான் மதிக்கிற பெரிய மனிதர்கள், நண்பர்களிடம் இதைப்பற்றிப் பேசி அவர்களுடைய கருத்துகளை வரவேற்க அவர் விரும்பினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!