Home » நல்லது கெட்டது – 13
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 13

தேர்தலில் ஏஐ: நல்லதா, கெட்டதா?

நடந்து முடிந்த 2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு இதுவரை இல்லாத அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் சமூக ஊடகங்களால் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் புரிந்துகொள்ளும் முன்னரே இதுவும் வந்துவிட்டது. செய்யறிவின் தாக்கம் இந்தத் தேர்தலில் எப்படி இருந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

ஏஐயின் பாதிப்பு என்று எடுத்துக் கொண்டால் மெய்ப்புனைவு (டீப்ஃபேக்) என்னும் போலிக் காணொளிகள் மிகப் பெரிய ஆபத்தாக இருந்துள்ளன. ஒஹையோ மாநிலத்து அமெரிக்கச் செனட் தேர்தலில் தொலைக்காட்சிச் செய்தி போலவே உருவாக்கப்பட்ட காணொளி சர்ச்சையைக் கிளப்பியது. இதைப் போலவே டெக்சாஸ் மாநிலத்து அமெரிக்க செனட் தேர்தலில் ஒரு முன்னாள் மாணவர் சொன்னதைப் போன்ற பொய்யான வாக்குமூலம் வெளியிடப்பட்டது.

விஸ்கான்சின் மாநிலத்து அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர், அவரது போட்டியாளர் சொன்னதாக ஒரு பொய்க் காணொளியைப் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொளியில் ‘நானே வெற்றி வேட்பாளர், என்னைப் பிடிக்காத சாதாரண மக்கள் கேக் சாப்பிடட்டும், எப்படியும் அவர்கள் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்’ என்று திமிராகச் சொல்வது போல இருந்துள்ளது. இதைப் பற்றிச் சட்டப்பூர்வப் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!