Home » சாமிபூமி – 13
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 13

மாசி பெரியண்ணசாமி

நள்ளிரவு. கொல்லிமலை அடிவாரக் கிராமம். கருமேகங்கள் நிலவை மறைத்திருந்தன. பூமி மசமசப்பான வெளிச்சத்தில் இருந்தது. காற்றில் மரங்கள் சாமி வந்த பெண்கள் போல ஆடின.

திடீரென்று காட்டுக்குள் பசுவின் அலறல். காவல் குடிசையிலிருந்து வேல் கம்புடன் பாய்ந்து வந்தான் மாசி.

‘அடேய்! அது என் உசுரு. அதைத் தொட உனக்கு என்ன துணிச்சல்?’

அக்காலத்தில் மனிதர்கள் விலங்குகளிடம் பேசுவார்கள். அவை கண்களாலும் செய்கைகளாலும் பதில் கூறும்.

புலி பசுவை விட்டுவிட்டு அவனை நோக்கிப் பாய்ந்தது. மாசி அதன் மீது ஈட்டியைப் பாய்ச்சினான். காயமடைந்த புலி அவனைத் தாக்கிவிட்டு மறைந்தது.

மாசியின் தோளிலிருந்து ரத்தம் வழிந்தது. எழுந்து நின்றான். இறந்து கிடந்த பசுவைப் பார்த்தான். அவனது முகம் இறுகியது.

‘இனி இந்த கிராமத்தில் காட்டு விலங்குகளால் ஒரு உயிர் போகக் கூடாது. அப்படிப் போனால் அது என் உயிராகத்தான் இருக்கும்.’

அந்தப் பெரிய ஆலமரத்தடியில் கிராமப் பஞ்சாயத்து கூடியிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!