Home » நீலமலை ரகசியம் – 5
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 5

5. முதல் சர்வே

இரண்டு நாள்கள் மலையேறி தேனாட்டிற்கு வந்த பிறகு மொத்தக் குழுவுக்குமே உற்சாகம் ஏற்பட்டிருந்தது. மலைநாட்டின் இந்தக் கிழக்குப் பகுதி பழங்குடியினரால் பவுங்கநாடு என்று அழைக்கப்பட்டது. அங்கே தங்கியிருந்த இருவேளைகளும் அங்கிருந்த மக்கள் செய்த உபசாரங்களால் வெள்ளையர்கள் மகிழ்ந்து போயிருந்தனர்.

பயணம் முடிந்து சல்லிவனுக்கு ஒரு நீண்ட அறிக்கையை விஷ்ஷும் கிண்டர்ஸ்லியும் சமர்ப்பித்திருக்கின்றனர். அதில் இந்தக் கிராமங்களைப் பற்றி இவ்வாறாக விவரிக்கின்றனர்.

‘இவற்றைக் கிராமங்கள் என்று சொல்வது சற்று ஆடம்பரமான வார்த்தைப் பிரயோகம். எண்ணி நான்கைந்து வீடுகள்தான் இருக்கின்றன. அனைத்தும் மண் குடில்கள். புல்லினாலான கூரை வேய்ந்திருக்கிறார்கள். எல்லாக் குடில்களின் பக்கத்திலும் தொழுவம் இருக்கிறது. சராசரியாக ஒரு குடிசைவாசி நான்கு எருமைகளையாவது வளர்க்கிறான். சொற்பமாக விவசாயமும் செய்கிறார்கள்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!