இந்த வருடத்தின் முதல் நாளே கொண்டாட்டத்தோடு தொடங்கியது. புதிய தலைமுறை டிஜிடல் இதழில் என்னுடைய குறுநாவல் ‘சக்ரவியூஹம்’ ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வெளிவந்தது. பல புதிய வாசகர்கள், தீவிர விமர்சனங்கள் எனப் பல புதிய திறப்புக்களைக் கொடுத்தது. பிரபலமான ஓர் ஊடகத்தில் எழுதுவதன் பலனை நன்கு புரியவைத்தது...
Tag - சிவராமன் கணேசன்
பேருந்து சமவெளியிலிருந்து மலையேறத் தொடங்கியிருந்தது. காட்டின் ரீங்காரங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. மேகங்கள் கீழிறங்கி, மலைக்குள் உலாவி தரையைத்தொட முயற்சி செய்துகொண்டிருந்தன. குளிர் ஏறத்தொடங்கியது. எதிர் வெயிலில் நீலமாய்த்தெரிந்த மலைகளெல்லாம் தணிந்து, இப்போது கரும்பச்சைக்கு மாறத் தொடங்கியிருந்தன...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன்பு தலைகுனிந்து நிற்பதை உணர்தல் ஆழ்ந்த ஆன்மிகம். “வானமும் தெரியாமல், பூமியும் தெரியாமல், மேகம் சூழ்ந்து வலுத்துப் பெய்யும் இந்த...
மிளகாய்ப்பொடியும், புளியும், பெருங்காயமும் கலந்த குழம்புக்கரைசலின் ஆதார வாசனையோடு, இள முருங்கைக்காய், சிறிய வெங்காயங்கள், கருவேப்பிலை சேர்ந்து எழும் அற்புத மணம் இந்த அதிகாலையை அத்தனை சுகந்தமாக்குகிறது. கண்களை மூடி, அந்த தூரத்துக் குயிலின் ஓசையை இந்தக் கூட்டணிக்கு இசைச் சேர்க்கையாகச்...
அவனைப் பார்ப்பது அது முதன்முறையல்ல. இந்த இரண்டு நாள்களில் அதிகம் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். புதிதாக வந்திருக்கிறான். வெள்ளைச்சட்டை, சாம்பல் நிறத்தில் பேண்ட் யூனிஃபார்ம். பழைய மகாபலிபுரச் சாலையிலிருக்கும் அந்தப் பணக்காரப் பள்ளியாக இருக்கலாம். சிரிக்கும்போது சட்டென விழுந்து நிறையும்...
மழை வலுத்திருந்தது. மின் நிலையத்தில் போதிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் கிளம்புவதற்குள் நன்கு இருட்டியிருந்தது. ஒரு சுற்று மேலணைக்குச் சென்று பார்வையிட்ட பிறகு வீட்டிற்குச் செல்லலாமா என்று யோசித்தேன். “இந்தக் கனமழை இரவில், காட்டுச்சாலையில் பயணம் போகும் அந்த சந்தோஷத்தை ஏன் இழக்கிறாய்” என்றது மனது...














