Home » நீலமலை ரகசியம் – 32
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 32

32. பைகாரா

பைகாரா என்பது ஓர் ஆறு. அது தெய்வம் மண்ணில் இறங்கி வந்து உருவாக்கிய நீர்நிலை என்பது தோடர்களின் நம்பிக்கை. ஒருகாலத்தில் அது தோடர்கள் மட்டுமே வாழ்ந்து வந்த நிலமாக இருந்தது. அந்தக் காலத்தில் நீலகிரியின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஆறுகளும் ஓடைகளும் மிகுந்திருந்தன. ஆகவே அங்கு வறட்சியோ தட்டுப்பாடோ இல்லாதிருந்தது. ஆனால் வடக்குப் பகுதியில் எந்த ஆறும் இல்லை. தண்ணீர் என்பது அபூர்வமான ஒன்றாக இருந்தது. புற்கள் கருகிக் கிடந்தன. தோடர் மக்களின் வாழ்வாதாரமான எருமைகள் தாகத்தால் தவித்தன.

இந்த நிலை மாற வேண்டும் என்று, மக்கள் தங்கள் குலதெய்வமான தேய்குர்ஷி தேவதையை நோக்கி வேண்டினார்கள். பல வருடங்களுக்குப் பல பூஜைகள், பல்வேறு விதமான வழிபாடுகளை நிகழ்த்திக்கொண்டே இருந்தார்கள். இறுதியில் தேய்குர்ஷி மண்ணில் இறங்கிவந்தாள். மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாள். அங்கே நீர்நிலைகள் எதுவும் உருவாக வாய்ப்பில்லை என்பதைத் தெரிவித்தாள். எனினும் அவர்களின் வாழ்வாதாரத்துக்காகத் தானே முக்குருத்தி மலை மேல் கிடந்து அங்கிருந்து ஒரு புதிய நீர் நிலையை உருவாக்குவேன் என்று உறுதிகூறினாள்.

முக்குருத்தி என்றால் மூக்குத் துருத்தி என்று பொருள். தேய்குர்ஷி எனும் தெய்வத்தின் கூர்மையான நாசியிலிருந்துதான் பைகாரா ஆறு இறங்கி வருவதாக நம்பிக்கை. இன்றும் நீங்கள் உதகமண்டலத்திலிருந்து வடக்குப் பகுதியை நோக்கும்போது நீள மூக்குக் கொண்டு ஒரு பெண் படுத்திருப்பதைப் போன்ற ஒரு மலையைக் காணலாம். அந்தக் கூர்மையான நீள மூக்குப் பகுதிச் சிகரத்துக்குத்தான் முக்குருத்தி என்று பெயர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!