தலைவர் நேருஜி
அன்றைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி, இந்திய சுதந்திரப் போராட்டம் இரண்டுக்கும் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டால், அது கட்சிக்கும், நாட்டுக்கும் நல்லது; அத்தகைய ஒரு தலைவர் காந்திஜிதான் என்ற அபிப்ராயம் காங்கிரஸ் கட்சியில் பரவலாக இருந்தது. அதே சமயம், தன் மகனைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என மோதிலால் நேருவுக்கும் விருப்பம் இருந்தது.
ஆகவேதான் காந்திஜிக்கு அவர் எழுதிய கடிதத்தில் “நீங்கள்தான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கு முற்றிலும் தகுதியான நபர். ஆனால், ஒரே ஒரு விஷயம்தான் இடிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
மேலும், “நான் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டபோது கூட இந்தப் பிரச்னையை எதிர்கொண்டேன். அதாவது, கட்சியின் தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்குத் தகுதியான இளைஞர்கள் இருக்கும் போது, வயசாளியான நான் பதவியையும், அதிகாரத்தையும் இறுகப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டுமா? என்பதுதான் அது” என்று நினைவுகூர்ந்தார்.
அடுத்து புத்திர பாசம் கண்களை மறைத்துவிட்டதோ என்னவோ… ஒரு படி மேலே போய், “ காந்திஜி! இன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்தான்! ஆனால், அவர்கள் முன்பு போல இல்லை; உங்கள் மீது மரியாதை வைத்திருந்தாலும், அவர்கள் உங்களது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, நடந்துகொள்ளத் தயாராக இல்லை.
Add Comment