96. நேருவின் கை ஓங்கியது
காந்திஜியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை ஒரு “பைத்தியக்காரன்” என்று நேரு குறிப்பிட்டதுடன் வேறு ஓர் விஷயத்தையும் சுட்டிக் காட்டினார்.
கடந்தசில ஆண்டுகளாக, மாதங்களாக இந்த நாட்டில் மக்கள் மனங்களில் நஞ்சு தூவப்பட்டுள்ளது. அந்த நஞ்சு நாடெங்கும் பரவி மக்கள் மனதிலேயும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும். நாட்டில் பரவியுள்ள நச்சுத் தன்மையை அடியோடு அகற்றியே ஆகவேண்டும்.
நம்மை நாற்புறங்களிலும் பல விதமான ஆபத்துக்கள் சூழ்ந்துள்ளன. அவையனைத்தையும் நாம் துணிவோடு எதிர்கொள்வோம்
அப்படி ஆபத்துக்களை எதிர்கொள்ளும்போது நாம் பைத்தியக்காரத்தனமான முறையில் இல்லாமல், நம் தேசப்பிதா காந்திஜி கற்பித்துள்ள முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால், அதற்காக நாம் வலிமையற்றவர்களாக இருக்க வேண்டுமென்று பொருள் கொண்டுவிடக்கூடாது. நம்முடைய வலிமையாலும், ஒற்றுமையாலும், நாம் சந்திக்கிற எல்லா இடர்ப்பாடுகளையும் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும்.
Add Comment