Home » ஒரு குடும்பக் கதை – 79
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 79

79. நேரு, இந்திரா கைது

காந்திஜி தன் உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டாலும், இறுதியாக அவர் தனக்கே உரிய கடிவாளத்தைப் போடத் தவறவில்லை. போராட்டத்தில் இறங்கலாம். ஆனால், அதில் வன்முறைகளுக்குத் துளியும் இடமில்லை! நம்முடைய போராட்டம் நூறு சதவிதம் அஹிம்சை வழியில்தான் நடக்க வேண்டும்” என்று கண்டிப்பாகச் சொல்லிவ்ட்டார்.

காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் காந்திஜியின் “செய்! அல்லது செத்து மடி!” என்ற வீராவேச உரையைக் கேட்டு, ஜவஹர்லால் நேருவே துணுக்குற்றார். காந்திஜியின் இந்த முடிவினால், இந்தியாவில், ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி ஒரு போராட்டத்தில் இறங்கினால், அது உலகப்போரில் ஹிட்லர் மற்றும் அவரது கூட்டாளிகளுடைய கடுமையான தாக்குதலைச் சமாளிக்கத் திணறிக் கொண்டிருக்கும் பிரிட்டனுக்கு மிகப் பெரும் நெருக்கடியை உருவாக்கும். அதன் தாக்கம் ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா என எங்கெங்கும் எதிரொலிக்கும் என்று கருதினார்.

நேரு தன் எண்ணத்தை காந்திஜியிடம் பகிர்ந்துகொண்டபோது அவர், “வெள்ளையனே வெளியேறு” என்று நாம் குரல் கொடுத்தால், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? எங்கள் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை எங்களிடமே கொடுத்துவிட்டு நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்பதுதான். அதற்காக பிரிட்டிஷ் ராணுவம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பது கிடையாது! “ என்று விளக்கம் கொடுத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!