Home » பணம் படைக்கும் கலை -15
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை -15

15. நமக்கு நாமே பண்ணையார்

எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார்.

அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து விழா என்றால், அவர்கள் அந்தப் பண்ணையாரிடம்தான் வந்து நிற்பார்கள். அவரும் மீசையை முறுக்கியபடி, ‘எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன், நீ கவலைப்படாம போய்க் கல்யாண ஏற்பாட்டைக் கவனி’ என்பார். உடனே, அவர்கள் முகம் மலர்ந்து, ‘ஐயா, நீங்க நல்லா இருக்கணும்’ என்று அவரை வாழ்த்துவார்கள்.

அரசு, தனியார் நிறுவனங்களும் கிட்டத்தட்ட அந்தப் பண்ணையாரைப்போலத்தான். இவை தங்களிடம் வேலை செய்கிறவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதுடன், அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தேவையான பெரும்பாலான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்கின்றன, அவர்களுடைய நலனைக் கவனித்துக்கொள்கின்றன, அப்போதுதான் அவர்கள் இன்னும் நன்றாக வேலை செய்வார்கள், நாமும் நன்கு வளரலாம் என்று நினைக்கின்றன. ‘நம் பணியாளர்களை நாம் அக்கறையாகப் பார்த்துக்கொண்டால், அவர்கள் நம் வாடிக்கையாளர்களை இன்னும் அக்கறையாகப் பார்த்துக்கொள்வார்கள்’ என்பது உலகெங்கும் உள்ள தொழில் கணக்கு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!