மூன்று உத்திகள்
வாய்மொழி, உடல்மொழி பொய் காட்டும் தடயங்களைச் சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் நாம் இன்னும் ஒருபடி மேலேறிச் செல்லப் போகிறோம்.
இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகும் உத்திகள் புலன் விசாரணையில் பயன்படுத்தப்படுபவை. Interrogation என்பார்களே, அதுதான். இன்ட்ராகேஷன் என்பது இன்னொரு புத்தகமாகவே எழுதக்கூடிய அளவுக்குத் தனிப்பெரும் இயல். அதனுள் நாம் நுழையப் போவதில்லை. அந்த இயலின் வாயிலுக்கு முன் நின்று உள்ளே எட்டிப் பார்க்கப் போகிறோம், அவ்வளவே.
இந்த அத்தியாயத்தில் நாம் சந்தேக நபரின் மீது மூன்று உத்திகளால் தாக்குதல் நடத்தப் போகிறோம்.
முதல் உத்தியில், சந்தேக நபரைக் கேள்வி கேட்கப் போகிறோம். ஆனால் அந்தக் கேள்வி நேரடியாகப் பழி சுமத்தும் கேள்வியாக இராது. அதாவது, ‘என் மூக்கைக் குறி பார்த்து அண்டங்காக்கை என்றாயாமே’ என்ற வகையில் இருக்காது. அவ்வகைக் கேள்விகள் பொய்யரைத் தற்காப்பு நிலைக்குக் கொண்டுசெல்லும். பார்த்தோமல்லவா? நிராயுதபாணியை அடிப்பதுதான் சுலபம். எனவே, கேள்வி இப்படி அமையலாம்.
‘நேத்து கேண்டீன்ல ஜாலியா சிரிச்சிப் பேசி எஞ்ஜாய் பண்ண போல?’















Add Comment