Home » சத் – 12
சத் • தொடர்கள்

சத் – 12

இது நியாயமா?

கௌரிமாவைப் பின்தொடரும்போது யாஷா எந்தவித உணர்வும் இல்லாமல் தனியாக நடப்பவளைப் போல நடந்தாள். தனக்குள் கேட்கும் யக்‌ஷியின் குரல் இவளுக்கும் கேட்கிறதே என்ற உணர்வு வந்தவுடனேயே அங்கே புதிதாக யாரும் இல்லை என்பதைப் போல உணர்ந்தாள்.

ராம்சாட்டியின் வீதிகள் படிக்கட்டுக்களால் நிறைந்திருந்தன. வாகனங்கள் செல்லும் வாய்ப்பு இல்லாத மலைக்கிராமத்தின் வீதிகள் அவை. இரண்டு பக்கமும் நெருக்கமான வீடுகள். படிக்கட்டுகளில் வீடுகளின் கழிவு நீர் ஓடும் பாதைகள் என வீதிகள் சந்துகளாகவே காட்சி அளித்தன.

வயதுக்குச் சம்பந்தம் இல்லாமல் கெளரிமா கைத்தடியை ஊன்றி, பழுப்பேறிய வெள்ளை சேலையில் முயல் போலப் படிக்கட்டுகளில் ஏறினாள். சந்துகளின் கடைசியில், நெடுஞ்சாலைக்கு அருகே ஒரு சிறுவர் பள்ளிக்கு அருகிலிருந்த வீட்டின் முன் நின்றாள்.

அது பழைய தகர ஷீட்டுகள் போட்ட வீடு. முன்புறம் திண்ணையும் அதில் ஒரு பெட்டிக்கடையும் இருந்தன. தனது சேலையின் தலைப்பு முனையில் இருந்த சாவியால் வீட்டைத் திறந்து உள்ளே அழைத்தாள் கெளரிமா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!