Home » ரகசியம், பரம ரகசியம் – 3
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 3

உடற்பயிற்சியும் உற்சாகமான நாளும்

காலையில் செய்யும் சிறு உடற்பயிற்சி பெரிய மாற்றத்தைத் தரும். அது உங்கள் மனநிலையை உடனடியாக மாற்றும். உடல் எழுந்தவுடன் மனமும் விழிக்கிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் அதிகம் செல்கிறது. இதனால் நாள் முழுவதும் தெளிவான சிந்தனை கிடைக்கிறது.

காலை நேரச் சூரிய வெளிச்சமும் ஒரு கூடுதல் பலன். வெளியே நடக்கும்போது சூரிய ஒளி கிடைக்கிறது. இது உடலின் உள்ளகக் கடிகாரத்தைச் சரிசெய்கிறது. இரவுத் தூக்கமும் சிறப்பாக அமையும். எனவே காலை நடை நாளையும் சுறுசுறுப்பாக்குகிறது, இரவையும் அமைதியாக்குகிறது.

உடற்பயிற்சி செய்ய எனக்கு நேரமே கிடைப்பதில்லை எனப் பலர் நினைப்பது தவறு. உடற்பயிற்சி என்றால் ஒரு மணிநேரம் தேவை என்று நினைக்கிறோம். அது உண்மையல்ல. சிறு துண்டுகளாகப் பிரித்துச் செய்யலாம். பத்து நிமிடம் யோகா செய்யலாம். மற்றொரு பத்து நிமிடம் பிலாட்டே செய்யலாம். மூன்றாவது பத்து நிமிடம் எலிப்டிகல் அல்லது நடைப்பயிற்சி. மூன்றும் சேர்ந்தால் முப்பது நிமிடம் செலவழியும். ஆனால் ஒவ்வொன்றையும் தனித்தனியாகச் செய்வதால் எளிதாகத் தோன்றும். அதிக நேரம் செலவிடுவது போலவும் தோன்றாது.

இந்த மூன்று பயிற்சிகளும் வெவ்வேறு நன்மைகளைத் தரும். யோகா உடலை நெகிழ்வாக்கும். மனத்தையும் அமைதிப்படுத்தும். பிலாட்டே தசைகளை வலுப்படுத்தும். உடல்நிலையைச் சரிசெய்யும். எலிப்டிகல் அல்லது ஓட்டம் இதயத்தைப் பலப்படுத்தும். மூன்றும் சேர்ந்தால் முழுமையான பயிற்சி கிடைக்கும். ஒரே பயிற்சியை மட்டும் செய்தால் சலிப்பு வரும். மாற்றி மாற்றிச் செய்தால் ஆர்வம் தொடரும். வாரத்துக்கு இரு தினங்கள் பிலாட்டேவுக்கு பதில் எடை தூக்கும் பயிற்சி செய்யலாம். அதே பத்து நிமிடங்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!