Home » ரகசியம், பரம ரகசியம் – 8
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 8

திட்டமிடுதலும் திட்டமும்

அலுவலகத்துக்குப் பயணம் செல்லும் முன் அன்றைய முக்கிய வேலைகளை ஒருமுறை நாள்காட்டியில் நோட்டம் விடுவது நல்லது. அது போலவே, பங்கெடுக்க இருக்கும் விவாதக் குழு, திட்ட ஆலோசனைக் குழு தொடர்பான கட்டுரைகளையும் திட்ட வரைவுகளையும் படித்துக் குறிப்புகள் எடுத்திருந்தால், அவற்றையும் முன்தினமே படித்து நினைவுபடுத்திக் கொள்வதும் நல்லது.

அலுவலகம் தொடர்பான மின்னஞ்சல்களுக்கு உடனே மறுமொழி சொல்லாவிடினும் மேலோட்டமாக பார்த்துவிடுவது நல்லது. அதேபோல் என்ன விதமான கூட்டங்கள், குழுக்களில் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது, போர்ட் மீட்டிங் இருக்கிறதா என்றும் கவனிப்பது நல்லது. அப்போதுதான் அதற்கேற்றவாறு ஆடைகளைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ள முடியும். ஆடம்பரமாக இருக்கத் தேவையில்லை, ஆனால் எளிமையாகவும் பொருந்துமாறும் இருக்க வேண்டும்.

மின்னஞ்சல்களைக் கவனிப்பதும், ஏதேனும் திட்ட வரவுகளை ஒருமுறை படிப்பதும் பலன் தரும். நாமே எழுதியது எனினும், நமது நினைவு சக்தியைத் தூண்டும். முந்தைய கூட்ட முடிவுகளைப் படிப்பது என எல்லாவற்றிற்கும் ஒரு பத்து நிமிடம் செலவு செய்தாலே போதுமானது. அது நமக்கு மிக நல்ல பிம்பத்தைக் கட்டுறுத்தும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!