திட்டமிடு தொட்டுவிடு
திட்டங்களை எழுதுவதோடு நின்று விடக்கூடாது. அதைச் செயல்படுத்தவும் வேண்டும். அப்படி நிறைவேற்ற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
பலர் சிறந்த திட்டங்களை எழுதுகிறார்கள். ஆனால் சிலரே அதை நிறைவேற்றுகிறார்கள். எழுதுவது எளிது, செயல்படுத்துவதுதான் கடினம். எழுதுவதற்கும் செய்வதற்கும் இடையே ஓர் இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியை நாம்தான் கடக்க வேண்டும்.
நாம் என்ன செய்து முடிக்க நினைக்கிறோமோ அதை நம் நலனை விரும்பும் ஒருவரிடம் சொல்ல வேண்டும். அவர் நண்பராக, உறவினராக, சக பணியாளராக என யாராக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நம் நலனில் உண்மையான அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் நம்மை ஊக்குவிப்பவராகவும் இருக்க வேண்டும்.
அந்தத் திட்டம் எதைப் பற்றியும் இருக்கலாம். உடல்நலம் குறித்ததாக இருக்கலாம். ஏதேனும் பழக்கத்தை மாற்றிக்கொள்வதாக இருக்கலாம். படிப்பு தொடர்பாக இருக்கலாம். வேலை தொடர்பான இலக்காக இருக்கலாம். எதுவானாலும் அதைச் சொல்வது அவசியம்.











Add Comment