தெரிவு செய், அதைத் தெரிந்து செய்
நாம் எல்லாரும் அதிக நேரம் செலவு செய்வது பொருள்கள் வாங்கும் இடத்தில்தான். அதிக நிதி முதலீடு செய்து வாங்கும் பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வாங்குவது பற்றி பிறகு பேசலாம். சீக்கிரமே காலாவதியாகக் கூடிய அடிக்கடி வாங்கும் பொருள்களுக்குக் கூட அதிக நேரம் செலவிட வேண்டுமா?
வார இறுதிகளில் காய்கறி வாங்குவது முதல் பலசரக்கு வாங்குவது வரை செலவு செய்யும் நேரம் மிக அதிகம். இதைச் சீர் செய்தாலே நேரம் மிச்சப்படும்.
அத்தியாவசியப் பொருள்கள் தீரும்போது அதை எழுதிவைக்க வேண்டும். ஒரு பட்டியல் தயாரித்துக்கொள்ளலாம். வார இறுதியில், அடுத்த வாரம் என்ன சமையல் செய்ய வேண்டும் என்பதற்கான உணவுப் பட்டியல் தயாரிக்க வேண்டும். இதைக் குடும்பமாகப் பேசி முடிவு செய்யலாம். இதில் நல்ல சத்துள்ள சரிவிகித உணவும், பலதரப்பட்ட சமையலும், எளிதாகச் சமைக்கக் கூடியதாகவும் இருக்குமாறு வடிவமைக்கலாம்.











Add Comment