162. நஞ்சேறிய சூரணம்
மடைப்பணியைத் தொடங்கவிருக்கிறோம். உனக்குப் பிடித்த எதையாவது சொன்னால் சேர்த்துச் செய்வோம் என்று அபுது சொன்னான்.
நொடிப் பொழுது திகைத்துப் பார்த்த சார்வாகன், மெல்லப் புன்னகை செய்தான்.
என்ன?
நீ கேட்கும்போதுதான் நினைவுக்கு வருகிறது. நான் இவ்விடத்துக்கு வந்ததும் உண்பதற்குச் சில பலகாரங்களைக் கொடுத்தீர்கள். நானும் மகிழ்ச்சியுடன் உண்டேன். எண்ணிப் பார்த்தால், அதற்கு முன்பு நான் உணவு உட்கொண்டு ஆறேழு கிழமைகள் ஆகிவிட்டன. உணவு என்பதே மறந்துவிட்டது அபுது.
உண்மையாகவா?
எனக்கே இது வியப்பாகத்தான் இருக்கிறது. உணவினால்தான் மனிதன் உயிர் வாழ்கிறான். அதில் ஐயமில்லை. ஆனால் உணவுக்கு அப்பாலும் வேறு சில உள்ளன என்று இப்போது தோன்றுகிறது.
இப்போது உதுமானி நாயனார் அவனது கரங்களைப் பற்றிக்கொண்டு சொன்னார்,
ஆறேழு கிழமைகளாக உண்ணவில்லை என்பதால் மனிதன் உயிர் வாழ உணவு தேவையில்லை என்று சொல்லிவிடுவாயோ என்று நினைத்தேன்.











Add Comment