Home » ரகசியம், பரம ரகசியம் – 11
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 11

உதவியும் பொறுப்பும்

இயந்திரங்கள் போலத்தான் உடலும். சுற்றுச்சூழலில் உள்ள நுண்ணுயிரிகளின் தாக்குதல்கள் அல்லது ஓயாத உழைப்பால் ஏற்படும் அசதி காரணமாக எப்போதேனும் நலக்குறைவு வரலாம். சின்னச் சின்ன உபாதைகள் தொந்தரவு தரும். தலைவலி, தொண்டை கரகரப்பு, சளி போன்றவை பருவகாலங்களுக்கு ஏற்ப தாக்குதலை நிகழ்த்தும். அப்போது வலிநிவாரணிகளைப் பயன்படுத்தலாம். இது தற்காலிக நிவாரணம் தரும். மீண்டும் நம் பணிகளைக் கவனிக்க உதவும்.

ஆனால் தொடர்ந்து மருந்து சாப்பிடுவது சரியல்ல. உடல் தொடர்ந்து சில அறிகுறிகளைச் சொன்னால், மருத்துவரை நாடி அவருடைய பரிந்துரைகளைப் பின்பற்றலாம். அவசியமெனில் ஓய்வெடுக்கலாம். உடல்நலனைப் புறக்கணிப்பது நல்லதல்ல. சிறிய அசௌகரியத்தையும் பொருட்படுத்தாமல் தள்ளிப்போடுவதைத் தவிர்க்கலாம். நாள் தவறாமல் தண்ணீர் குடிப்பதும், போதிய தூக்கமும் விரைவில் குணமாக உதவும்.

உடல்நலம் இல்லாதபோது உதவி கேட்பதில் தவறில்லை. அலுவலகத்திலோ வீட்டிலோ, உடல்நலம் சரியில்லை என்று சொல்லி உதவி கேட்கலாம். இதில் வெட்கப்படத் தேவையில்லை. மனிதன் தனியாக வாழும் இயல்பினன் அல்ல. நாம் ஒருவரையொருவர் சார்ந்தே வாழ்கிறோம். கூடி வாழும் இயல்பே நம் பலம். இதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!