Home » ரகசியம், பரம ரகசியம் – 29
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 29

சூரியனிலும் களங்கம் உண்டு

எல்லாவற்றையும் எப்போதும் சரியாகச் செய்பவர் என்ற பிம்பம் ஆபத்தானது. அது நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் மெல்ல வெறுப்பைத் தேடித்தரும். குழு உறுப்பினர்களிடம் அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். நமக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் இடைவெளி விழும். அது நம் எண்ணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் மறைமுகமாக அப்படி ஒரு தோற்றம் உருவாகக் கூடாது.

அதனால் சின்னச் சின்ன பிழைகளைப் பொதுவில் ஏற்றுக்கொள்ளலாம். அவை பெரிய இழப்பைக் கொண்டுவராதவையாக இருக்க வேண்டும். நம் ஆளுமைக்குப் பங்கம் வராதவையாகவும் இருக்க வேண்டும். இது நம் செயலுக்கு நாமே பொறுப்பேற்பதை உறுதிப்படுத்தும். நம்மைப் பற்றி ஒரு நல்ல பிம்பத்தையும் உருவாக்கும். நாமும் அவர்களில் ஒருவர்தான் என்ற நெருக்கம் பிறக்கும்.

உறவினர் வீடுகளில் இதைக் கவனித்திருக்கலாம். சில வீடுகள் எப்போதும் கண்ணாடி போலப் பளபளக்கும். அங்கே போனால் எதையும் தொடவே தயக்கமாக இருக்கும். உட்காரவும் பேசவும் கூட மனம் சங்கடப்படும். சில வீடுகளில் கொஞ்சம் புத்தகங்கள் இறைந்து கிடக்கும். அங்கே மனம் இயல்பாக, சுதந்தரமாக உணரும். முழுமையை விடச் சிறு குறைகளே மனிதர்களை நெருக்கமாக்குகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!