Home » உரி – 180
உரி • நாள்தோறும்

உரி – 180

180. நோய் முதல்

நேற்று காலை நாங்கள் தஞ்சப்புரிக்கு வந்து சேர்ந்துவிட்டோம். என் தந்தையை அணிமாவின் வீட்டில் விட்டுவிட்டு நொடிப் பொழுதும் தாமதிக்காமல் இந்தப் படித்துறையைத் தேடித்தான் வந்தேன். இரண்டு நாழிகைப் பொழுது தேடியும் என்னால் இந்த இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இந்தச் சரிவுக்கு மேலே செல்லும் பாட்டைக்கே வந்தேன். கால் காத தொலைவு நடந்திருப்பேன். படித்துறை தென்படவேயில்லை. எங்கெங்கும் புதர்கள் மட்டுமே தெரிந்தன. இப்போது மட்டும் எப்படி இங்கொரு படித்துறை தோன்றியதென்று விளங்கவில்லை ஐயனே. எனக்குக் கண் இருட்டிவிட்டது.

சார்வாகன் புன்னகையுடன் அவனை நெருங்கி அணைத்துக்கொண்டான்.

இது மாயம்தானா என்று பாரதாய தத்தன் கேட்டான்.

ஐயமென்ன உனக்கு? கண்கட்டேதான்.

எனக்கு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியா வியப்பா என்று தெரியவில்லை ஐயனே.

இரண்டுக்குமே அவசியமில்லை தத்தா. கேட்பதற்கு பதிலளி. உன் தங்கை அணிமாவுக்கு எங்கே திருமணம் நடந்தது?

குடந்தையில் எங்கள் இல்லத்தில்தான்.

உற்றார் உறவினர் ஊராரென நூறு பேர் வந்திருப்பார்களா?

இன்னும் அதிகம் ஐயனே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!