Home » ரகசியம், பரம ரகசியம் – 30
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 30

புதிதாய்ப் பிற

இதுவரை வெற்றிக்கான பல ரகசியங்களைப் பார்த்தோம். வெற்றியைத் தக்க வைத்துக்கொள்வதும் அவற்றில் ஒன்றுதான். அதற்கு நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வது மிகவும் அவசியம். புதிய திறன்களைத் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நம் குழுவினரும் கற்றுக்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரலாம். அந்தத் திறன்கள் நம் தொழிலோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். நம் வேலையை எளிமையாக்குவதாகவும் இருக்க வேண்டும்.

வீட்டிலும் இந்தப் புதுப்பித்தல் மிகவும் தேவைப்படுகிறது. புதிய சமையல் முறைகளைக் கற்றுக்கொள்ளலாம். புதிய கருவிகளைப் பயன்படுத்தப் பழகலாம். கற்றுக்கொள்வதை நிறுத்தும் நாளில் நம் வளர்ச்சியும் நின்றுவிடுகிறது.

புதிய தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டுவரும்போது சில தடைகள் வரும். தெரியாத விஷயங்களைப் பற்றிய பயத்தால் வரும் எதிர்ப்பு அது. பழகிய வழியை விட்டு விலக மனம் தயங்கும். இதைக் குறைக்க, முதலில் அவர்களுடைய பாதுகாப்பு உணர்வை வளர்க்கலாம். கற்றுக்கொள்வதால் வேலை எளிதாகும் என்று விளக்கலாம். நேர விரயம் தடுக்கப்படும் என்றும் எடுத்துச் சொல்லலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!