Home » சத் – 10
சத் • தொடர்கள்

சத் – 10

கர்ண யக்‌ஷி

நீலகண்ட மலை அவளுக்குப் புதிய பரிமாண உலகை உணர்த்திவிட்ட திருப்தியில் கீழே இறங்கினாள் யாஷா. வெறும் கையுடன் நரபலி என்றும் அலக்ஸிஸ் தேடல் என்றும் வந்தவள், இப்போது கை நிறைய அஷ்ட திக்கு பாலகர்களையும், யக்‌ஷிகளையும், யக்‌ஷர்களையும் கொண்ட ஓர் உலகத்தைத் தன்னுடன் சுமந்துகொண்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தாள்.

பெங்களூரில் இருந்து புறப்பட்ட மனநிலை திரும்ப வந்த உணர்வு அவளுக்கு எட்டிப்பார்த்தது. எங்கே செல்லப்போகிறோம் என்று ஒரு இலக்கும் இல்லை. இத்தனை சக்திகளைப் பயன்படுத்தி, அவற்றின் மேல் பயணித்து உயர் சக்தியை அடையச் சொன்ன பைராகியின் வார்த்தையைத் தவிர வேறு உந்துதல் இல்லை.

நீலகண்ட மலையின் அடிவாரத்தை அடைந்தாள் யாஷா. அங்கே ரிஷிகேஷ் செல்லும் பாதை இடதுபக்கம் இருந்தது. இமயமலையின் மேல் செல்லும் பாதை வலதுபக்கம் இருந்தது. நீலகண்ட மலையின் பாதை தொடங்கும் இடம் அவள் முதுகுக்குப் பின்னால் இருந்தது.

எங்கே செல்கிறோம் எனத் தெரியாமல் பறவை போலப் புறப்பட்ட யாஷா, இப்போது முச்சந்தியில் நிற்கிறாள். மீண்டும் ரிஷிகேஷ் செல்லலாம் என்றால், அங்கே தனிமையில் இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. மீண்டும் நீலகண்ட மலைக்குச் செல்லும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!