Home » பொய்யோடு விளையாடு – 22
தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 22

இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

கடைசியாக, இந்தப் பகுதியில் உள்ள பொய் காட்டும் தடயங்களோடு நம்முடைய மூட்டை நிரப்பலை நிறுத்திக்கொள்வோம். இதோடு மூட்டையைக் கட்டி மூலையில் போட்டு வையுங்கள், தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் ஒருவரைக் கேள்வி கேட்கிறீர்கள், அவரால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். உண்மைகள் அவருக்குத் துணையாக இல்லாதது அதற்குக் காரணமாக இருக்கலாம். எனவே, தகுந்த பதிலை அவர் புனைய வேண்டியிருக்கிறது. அதற்கு நேரம் தேவைப்படுவதால் ஓர் இடைவெளி தோன்றுகிறது.

ஆனால் இது ஒன்றை மட்டுமே வைத்து அவர் பொய்யர் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. முன்பு சொன்னதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒரேயொரு பொய் காட்டும் தடயத்தைக்கொண்டு எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது. பொய் காட்டும் தடயக்கொத்தைத் தேடுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட தடயங்கள் இருந்தாலொழிய எந்த முடிவுக்கும் வரவேண்டாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!