கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சென்ற வாரம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்வராகப் பதவியேற்றார். அப்போது அவருக்குக் கிடைத்த மக்களின் வரவேற்பை விட அதிகமான வரவேற்பு அமைச்சரவையில் பதிவேற்ற அனுசுயா சீதாக்காவிற்குக் கிடைத்தது.
சீதாக்காவிற்குத் தெலுங்கானா மக்களிடம் கிடைத்த அந்த வரவேற்பு இந்திய அரசியல் ஆர்வலர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. சீதாக்காவின் தன்னலம் கருதாத உழைப்பிற்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசுதான் அவர் பதவியேற்றபோது கிடைத்த மக்களின் அந்த ஆதரவுக் கரகோஷம்.
தன்னுடைய பதினான்காவது வயதில் மாவோயிஸ்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கிய சீதாக்கா இருபத்தி நான்கு வயதில் வழக்கறிஞராகி ஐம்பத்தி ஒரு வயதில் முனைவர் பட்டம் பெற்று ஐம்பத்தி இரண்டாவது வயதில் தெலுங்கானா சட்டப் பேரவை அமைச்சராகியிருக்கிறார்.
Add Comment