பால கணேஷ், மெட்ராஸ் பேப்பரின் உதவி ஆசிரியர். வெளியாகும் அனைத்துக் கட்டுரைகளையும் முதலில் வாசிப்பவர். அவர் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்: “புதிய இதழுக்கு மெட்ராஸ் பேப்பர் என்று பெயர் சூட்டியிருக்கிறேன்” என்று பாரா சொன்ன கணமே பெயர் பிடித்துப் போனது. அதற்கொரு இலச்சினை உருவாக்கும் ஆலோசனைகள்...
Tag - பால கணேஷ்
டிவி சீரியல் பார்த்து அழுது கொண்டும், ஓடிடி படங்களைப் பார்த்துக் கொலை காண்டாகியும் கொண்டிருந்த ஒரு தினத்தின் முன்மதியத்தில் எனக்குச் சில அசம்பாவிதத்தின் அறிகுறிகள் தெரிந்தன. காலையிலேயே என் காலிலொரு பல்லி விழுந்து, அல்பாயுசில் மிதிபட்டு இறந்து போனது. இடக்கண் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தது...
“ஹலோ…” “சார், அது விக்னேஷ் க்ளினிக்குங்களா..?” “ஆமாங்க…” “டாக்டர் விக்னேஷோட பேசணுங்க..” “எக்ஸாக்ட்லி நான்தான் பேசறேன்.” “நீங்க எக்ஸாக்ட்லியா..? ஆனா எனக்கு எக்ஸாட்லி வேண்டியதில்லை, டாக்டர் விக்னேஷ்தான் வேணும்.” “முருகா, நான்தாங்க விக்னேஷ், சொல்லுங்க…” “சொல்றேன் சார், ஆனா என் பேர்...
மொபைலில் தீவிரமாக எதையோ ஆராய்ந்து கொண்டிருந்த இகவானவன், “என்னங்க..” என்று காய்கறிக்காரன் வண்டியிலிருக்கும் மைக் கத்துவதைப் போன்ற டெஸிபலில் ஓர் அலறல் கேட்டுத் திடுக்கிட்டான். அவன் கையிலிருந்த மொபைல் நழுவித் தரையில் விழுந்து நீச்சலடித்தது. இருபத்தாறு மைல் மாரத்தான் ரேஸை இருபத்தைந்து நிமிடத்தில் ஓடி...
இகவின் பள்ளிப் பருவம் திருநெல்வேலியில் கழிந்தது. அப்போது அங்கே பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் முருகேசண்ணன். இக பத்தாம் வகுப்பில் நுழைந்திருந்த நேரம், வீட்டில் அவருக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழில் என்றில்லை.. உலகின் சகல மொழிகளிலும் முருகேசண்ணனுக்குப் பிடிக்காத ஒரே ஒரு வார்த்தை...
இகவுக்குச் சிறுவனாய் இருந்தபோதிலிருந்தே காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. வாலிபப் பிராயத்தை எட்டியதும், அவனும் பல பெண்களைக் காதல் செய்தான். ஆனால் பாருங்கள்… எந்தப் பெண்ணும் இவனைக் காதல் செய்யவில்லை என்பதால் வேறு வழியின்றி, வீட்டில் பார்த்த பெண்ணே இகவின்...
அன்றைய தினம் பொழுது விடிந்ததிலிருந்தே ‘ருத்ரன்’ படத்தை நாலு தடவை பார்த்துத் தொலைத்தவள் போல வெறுப்பாக எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் இகவின் மனைவி. மனைவியானவளின் எரிச்சல் வசவுகளைத் தாங்கி ஓரளவு ‘எரிச்சல் ப்ரூஃப்’ ஆகவே இக இருந்தான் என்றாலும் இன்றைய எரிச்சலின் காரணத்தை அவனால் யூகிக்கவே முடியவில்லை...
இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர் போலக் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்த இகவின் அருகில் வந்தாள் மனைவி. “என்னங்க, ஏன் இப்டி டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ல எதையோ லவட்டிக்கிட்டு வந்தவன் மாதிரி ‘ழே’ன்னு முழிச்சுட்ருக்கீங்க..? என்னாச்சு..?” கையிலிருந்த ஏடிஎம் கார்டைக் காட்டினான் இக. “இதைப் போட்டு பணம்...
இகவுக்குத் திருமணம் ஆன புதிதில் சில காலத்திற்கு ஒரு விசித்திரமான வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தான். ‘வியாதியில் என்னய்யா விசித்திரம்..?’ என்பீராயின்… இருக்கிறது. சாதாரணமானவனாக இயல்பாக அனைவருடனும் பேசிக் கொண்டிருக்கும் இகவின் காதில் அந்த ஒற்றை வார்த்தை விழுந்தால் போதும்… வெறி கொண்டவனாக...
மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த இகவின் அருகில் வந்தாள் மனைவி. “என்னங்க… என்ன பண்ணிட்ருக்கீங்க..?” அவள் குரலில் அக்கறையும் கனிவும் தொனித்தாலே அதன் பின்னால் ஏதோ அவனுக்கு ஆபத்தான ஒன்று இருக்கும் என்பதை அனுபவம் உணர்த்தியதால் சற்றே கலவரத்துடன் ஏறிட்டான். “ஒண்ணுமில்ல. சும்மா யூட்யூப்ல...