இஸ்லாமிய மதம் உருவாகி 1,400 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் பதினான்கு நூற்றாண்டுகளாக மாறாத ஒரு பாரம்பரியம் உண்டென்றால் அது பாங்கு சொல்வது. பத்ரு போரில் வெற்றி பெற்று கபாவைக் கைப்பற்றியவுடன், நண்பர் பிலாலை அழைத்தார் நபிகள் நாயகம். அதன் மீதேறி மக்களைத் தொழுகைக்கு அழைக்குமாறு பணித்தார்.
‘அல்லாஹு அக்பர்’ என்று ஆரம்பிக்கும் அவரது அழைப்புதான், இஸ்லாம் வரலாற்றில் கூறப்பட்ட முதல் பாங்கு. அதன் மூலம் ‘முதல் முஅத்தின்’ என்னும் பெருமையை பிலால் பெற்றார்.
பின்னாளில் நபிகள் நாயகமும் பிலாலும் இறைச் சேவை புரிய மதினாவுக்குக் குடிபெயர்ந்தனர். அவரது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் தொழுகைக்கான இடத்தை அமைத்தனர். பேரீச்சை மரத்தின் ஓலைகளாலும் கட்டைகளாலும் அமைக்கப்பட்டதுதான் முதல் பள்ளிவாசல். அதன் இன்றைய அமைப்புதான் ‘மஸ்ஜுதுன் நபவ்வீ’ பள்ளிவாசல். முதல் பாங்கு கூறிய பிலாலின் சேவை இங்கும் தொடர்ந்தது.















தாங்கள் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களையும் அவர் இறை அழைப்பு எனும் பாங்கு சொல்ல ஆரம்பித்த வரலாறு சொன்ன விதமும் நினைவு கூர்ந்து பொது சமூகத்திற்கு தெரியப்படுத்தியதும் பாராட்டிற்குறியது. மறைந்த ஷேக் பைசல் அவர்களைப் பற்றிய விவரமும் அறிந்து கொண்டோம். மெட்ராஸ் பேப்பர் மற்றும் தீபன் திருமாறனாகிய தங்களின் எழுத்து குறிந்த்தும் மிக்க மகிழ்வாக உணர்கிறேன். வாழ்க.
தோழமையாக ஒரு சுட்டல்.. “இஸ்லாம் வரலாறு” என எழுதினால் எழுத்துப்புணர்வு சரியாக வராது அதை இஸ்லாமிய வரலாற்றில் என எழுதினால் படிக்க சிறப்பாய் இருக்கும்.