Home » திசையெலாம் தமிழர் – 4
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 4

சசீந்திரன் முத்துவேல்

சசீந்திரன் முத்துவேல் சிவகாசியில் பிறந்தவர். பட்டாசுக்கும் அச்சுத்தொழிலுக்கும் பெயர்பெற்ற சிவகாசியில் அவருடைய தந்தை அச்சுத் தொழிலைச் செய்துவந்தார். பத்தாம் வகுப்புவரை தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர், மேல்நிலைக் கல்வியை ஆங்கிலம் வழியாகக் கற்றார். விவசாயப் பின்புலம் இல்லையென்றாலும் தான் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தோட்டக்கலைத் துறையில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தேனி மாவட்டம் பெரியகுளத்திலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

கல்லூரிப் படிப்பை முடித்த தறுவாயில் தந்தை இறந்துவிட, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக வேலை தேடி 1997ஆம் ஆண்டு மலேசியாவுக்குச் சென்றார். அங்கு ஒரு பல்பொருள் அங்காடியில் பணியில் சேர்ந்தார். படிப்புக்குத் துளியும் சம்பந்தமில்லாத வேலை. இரண்டு வருடங்கள் அங்கு வேலை செய்துகொண்டிருந்தபோது பப்புவா நியூ கினியில் வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரம் ஒன்று கண்ணில் பட்டது. அதுவரை அந்த நாட்டை உலக வரைபடத்தில்கூட அவர் பார்த்ததில்லை.

உண்மையில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டுமென்பது தான் சசீந்திரனுக்கு விருப்பமாக இருந்தது. பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவுக்கு அருகிலிருந்தது அவருக்கு வசதியாகத் தோன்றியது. அங்கு சென்று பணி அனுபவம் பெற்ற பிறகு ஆஸ்திரேலியாவுக்கு மாறிவிடுவது என்ற யோசனையில் இருந்தார். ஆனால் விதி வேறொரு திட்டத்தோடு காத்திருந்தது. ஒரே ஒரு விளம்பரம் அவருடைய பெயர் சரித்திரத்தில் இடம்பெயரக் காரணமாக இருந்தது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!