இரான், இஸ்ரேல், ரஷ்யா, உக்ரைன், ஆஃப்கன், லெபனான். கடந்த சில வருடங்களாகப் போர் என்றதும் நம் மனக்கண் முன் விரியும் நாடுகள் இவை. இவை தவிரவும் உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் போர்களைக் குறித்துப் பார்ப்போம்.
ஆப்பிரிக்க நாடான சூடான், கடந்த மூன்று ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் சிக்கியிருக்கிறது. சூடானுக்கு 1956ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்தரம் கிடைத்தது. அப்போதிலிருந்து அங்கு ராணுவ ஆட்சி முறைதான். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் நடந்துள்ளன. 2019இல் சூடானில் மக்கள் போராட்டம் வெடித்தது. உமர் அல்-பஷீரின் சர்வாதிகார ஆட்சி தகர்க்கப்பட்டது. ஹம்டோக் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரும் ராணுவ தலையீட்டின் கீழ் ஆட்சி செய்தார். 2021ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்பு. இம்முறை தேசிய ராணுவமும் (SAF), துணை ராணுவமும் (RSF) அதை அரங்கேற்றின.
பிரச்சனை அதற்குப் பிறகுதான் தொடங்கியது. RSF இயக்கத்தைச் சூடானிய SAF உடன் இணைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. RSFஇன் தளபதி Hemedti அதற்கு உடன்படவில்லை. 2023ஆம் ஆண்டு,RSF படைகள் சூடானிய ராணுவத் தளங்களைத் தாக்கின. சூடான் போர் மண்டலமாக உருவெடுத்தது . இதுவரை நான்கு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 21 மில்லியன் பேர் உணவின்றித் தவிப்பதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.















Add Comment