Home » மறக்கப்பட்டவள்
கிச்சன் கேபினட்

மறக்கப்பட்டவள்

எலிசா ஆன்ட்ரூ

எலிசா ஆன்ட்ரூ ஜாக்சன்

‘அவர் விடுவிக்கப்படுவார் என்று எனக்குத் தெரியும். நான் அவரை நம்பினேன், நம்புகிறேன்!’ — 1868ஆம் ஆண்டு, தன் கணவர் மீது நடந்த பதவிநீக்க விசாரணை நிறைவடைந்ததும் எலிசா ஆன்ட்ரூ ஜாக்சன் தனது மகள் மார்த்தாவிடம் சொன்ன வார்த்தைகள் இவை. இந்தக் குறுகிய வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது ஒரு பெண்ணின் வாழ்நாள் அர்ப்பணிப்பும் நம்பிக்கையும்.

அமெரிக்க வரலாற்றைப் பேசும்போது, வெள்ளை மாளிகையில் வாழ்ந்த நாற்பத்தைந்து முதல் பெண்மணிகள் பலரைப் பற்றி நாம் பேசுவோம். ஆனால் எலிசா ஆன்ட்ரூ ஜாக்சனை வரலாறு மறந்துவிட்டது. அவர் வெளியே வரவில்லை, பரப்புரைகளில் அழகாகவும் நேர்த்தியாகவும் தோன்றவில்லை, சொற்பொழிவுகள் ஆற்றவில்லை. ஆனால் அவருடைய அமைதியான சக்தியால் வெள்ளை மாளிகை இயந்திரம் ஓடியது.

1810ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி, கிழக்கு டென்னிசியின் கிரீன்வில் நகரில் எலிசா மெக்கார்டில் பிறந்தாள். அவளுடைய தந்தை ஜான் மெக்கார்டில் காலணி தைப்பவராகவும், சாலை ஓரத்தில் விடுதி நடத்துபவராகவும் இருந்தார். ஆனால் எலிசா குழந்தையாக இருக்கும்போதே அவர் இறந்துவிட்டார். அன்றிலிருந்து அம்மா சாரா தன் மகளைத் தனியே வளர்க்க வேண்டியிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!