Home » திசையெலாம் தமிழர் – 5
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 5

அரவிந்த் சுப்ரமணியன்

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக 2014 முதல் 2018ஆம் ஆண்டுவரை செயல்பட்டவர் அரவிந்த் சுப்ரமணியன். நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் பணி அது. தமிழ்நாட்டிலிருந்து இந்தப் பதவியில் பொறுப்பேற்ற இரண்டாவது தமிழர் இவர். மூன்றாண்டுகளில் இந்தப் பதவி முடிவுக்கு வந்தபோது மேலும் ஓராண்டுக்குப் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆனால் அரவிந்த அந்தப் பதவியை இடையிலேயே ராஜினாமா செய்யும் சூழலுக்கு ஆளானார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் மாறிய பிறகு, ஒன்றரை வருடங்களாகக் காலியாக இருந்தது அந்தப் பதவி. அதில் தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சுப்ரமணியன் பதினாறாவது தலைமைப் பொருளாதார ஆலோசகராக 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றார்.

மோடி தலைமையிலான ஆட்சியில் நடந்த பெருந்துயரமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அரவிந்த் சுப்ரமணியன்தான் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!