Home » வாக்காளராக நம் கடமை என்ன?
நம் குரல்

வாக்காளராக நம் கடமை என்ன?

சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் பெரும் பேசுபொருளாக இருந்தது. இந்தப் பணி தொடங்கிய சமயத்தில் இது வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்க நடக்கும் சதி என்றெல்லாம் விவாதங்கள் நடந்தன. இந்த நடவடிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் அவரவர் அரசியலைப் பேசினர்.

திருத்தம் முடிந்து பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். தகுதி இருந்தும் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்து இணைந்துகொள்ளலாம் எனச் சொன்னது இந்தியத் தேர்தல் ஆணையம். இனி இது வாக்காளர்கள் பிரச்சினை என நினைத்து அரசியல் கட்சிகள் அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

தங்களுடைய பெயரைப் பட்டியலில் இணைக்க இன்றைக்கும் வாக்காளர்கள் தனியாகப் போராடி வருகின்றனர். அவர்களுக்காகப் பேச எந்த அரசியல் கட்சிக்கும் நேரமில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட பிறகு கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் தொகுதி உடன்படிக்கைகளும் அவர்களுடைய பட்டியலில் முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!