Home » சீனா பஜார் C/o மதராஸ் கோட்டை
தமிழர் உலகம்

சீனா பஜார் C/o மதராஸ் கோட்டை

இந்தியா – சீனா இரு நாடுகளும் இன்னொரு நாட்டுடைய வளர்ச்சியை அச்சுறுதலாக அல்லாமல் வாய்ப்பாகத்தான் பார்க்கவேண்டும். இரு நாடுகளும் கடந்த கால நிகழ்வுகளிலிருந்து மீண்டு வருகின்றன என்று பேசியிருக்கிறார் இந்தியாவுக்கான சீனா தூதர் சு பெய்ஹாங். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இரு நாடுகளுக்குமான தூதரக உறவின் 75 ஆவது ஆண்டு விழாவில் அவர் உரையாற்றினர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஆயிரம் அதிருப்திகள் இருந்தாலும் முக்கியமாக மூன்று பிரச்சினைகளைச் சொல்லலாம். முதலாவது எல்லைத் தகராறு. சில ஆண்டுகளுக்கு முன்பு இரு நாட்டு வீரர்களும் எதிரெதிரே முறைத்துக்கொண்டு நின்றதும் அது கைகலப்பில் முடிந்ததும் நினைவிருக்கும். சிறிது சிறிதாக அவர்கள் எல்லைக் கோட்டை தள்ளிக் கொண்டே வந்து அணை கட்டுவது, சாலைகள் அமைப்பது என இருக்கும் சூழ்நிலையில், மீண்டும் ஒரு முறை எல்லைகளைப் பற்றி உட்கார்ந்து பேசத்தயார் என அறிவித்திருக்கின்றனர். இரண்டாவது, திபெத் மீதான சீனாவின் உரிமை கோறல். நேரு காலம் தொட்டே திபெத் தன்னாட்சி பெற்ற சீனாவின் பகுதி என்பதை இந்தியா ஒப்புக்கொண்டது என்னமோ உண்மைதான் இருப்பினும் அது சீனாவின் பிரிக்க முடியாத சொந்தப் பிராந்தியம் என்னும் கூற்றை இந்தியாவால் அங்கீகரிக்க முடியவில்லை. தலாய்லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததையும் சீனா விரும்பவில்லை. நேரடியாக இவ்விஷயத்தில் சீனாவை நாம் அதட்டவும் முடியாது, காரணம் அது சீனா – இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் பதற்றத்தை உருவாக்கிவிடலாம். மூன்றாவது சீனா – பாகிஸ்தான் உறவு.

மஹாபாரதம், அர்த்தசாஸ்திரம், மனுஸ்மிருதி போன்ற நூல்களில் சீனாவைப் பற்றிய குறிப்புகள் இருந்திருக்கிறது. சீனர்கள் அவர்களுடைய நாகரிகத்தை எப்போதுமே பெருமையாகவே எண்ணுபவர்கள். அதனாலேயே மற்றவர்களைக் கொஞ்சம் கடைக்கண் கருணையோடே பார்ப்பவர்கள். அவர்களுக்கு வடக்குப் பக்கம் வாழ்ந்த பூர்வ குடிகளை ஹூன் அடிமைகள் எனக் குறிப்பிட்டனர். வட மேற்கில் இருந்தவர்களைக் காட்டுமிரண்டிகள் என்றே குறிப்பிட்டனர். அவர்களைப் பொறுத்தவரை ஜப்பானியர்கள் குள்ளமான கடற்கொள்ளையர்கள். ஆனால் இந்தியர்களைப் பற்றிய அவர்களது அபிப்பிராயம் சற்றே வித்தியாசமானது. அவர்கள் இந்தியாவைக் குறிக்கப் பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று, புத்தரின் நிலம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்